![Putham Pudhu Kaalai Vidiyaadhaa movie trailer goes viral](http://image.nakkheeran.in/cdn/farfuture/HIXLSvGTQkuBQtmsc_mppG5g06WO3B_V-n-U2OFFcWc/1641386129/sites/default/files/inline-images/putham.jpg)
தமிழ் சினிமாவில் அந்தாலஜி திரைப்படங்களுக்கான வரவேற்பு அதிகமாகி வருகிறது. சமீபத்தில் வெளியான 'பாவக்கதைகள்', 'நவரசா' உள்ளிட்ட அந்தாலஜி திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்போது ஐந்து கதைகள் கொண்ட 'புத்தம் புது காலை விடியாதா' என்ற அந்தாலஜி திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந் மற்றும் டீஜே அருணாசலம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று(4.12.2022) 'புத்தம் புது காலை விடியாதா' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. கரோனா ஊரடங்கில் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் சவால்களையும் மையமாக ஐந்து கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது யூடியூப் தளத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்படம் வரும் 14 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.