Skip to main content

''இவர்கள் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' - பிரசன்னா கேள்வி!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

gafg


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் கோடைகாலம் காரணமாகவும், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் வீட்டிலேயே அடங்கியிருப்பதால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது.
 


இதற்கிடையே கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பிரசன்னா மின்சார வாரியம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்... ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' எனப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பலரும் பதில் அளித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்