![brhrhrf](http://image.nakkheeran.in/cdn/farfuture/lfi3rqF-5xiwKslocggJrIMOC40a6fg55P-l-jxhHG4/1621420665/sites/default/files/inline-images/8da3220d-0b0a-4d25-861e-3ca976c16162.jpg)
நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் கரோனா விழிப்புணர்வு குறித்து இயக்குநர் பேரரசு சமூகவலைத்தளத்தில் யோசனை தெரிவித்துள்ளார். அதில்...
"தமிழ்நாட்டில் உச்சத்தில் உள்ள சில நடிகர்களின் சின்ன அசைவு கூட இங்கே பல அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களின் ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லப்படுகிறது. அவர்களின் ஹேர் ஸ்டைல், உடை இவற்றைக் கூட அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த கரோனா பேரிடர் காலத்தில் உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கரோனா விழிப்புணர்வு வீடியோவோ அல்லது அறிக்கையோ வெளியிட்டால் அது நிச்சயம் மக்கள் மத்தியில் போய்ச் சேரும். பலரின் உயிர் காக்கும் செயலாகவும் அமையும்! எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் அதை விட இது பயனுள்ளதாக அமையும்.
நன்றி
வாழ்வோம்!
வாழவைப்போம்!!
பேரரசு" எனப் பதிவிட்டுள்ளார்.