மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழா கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இத்திரைப்பட விழாவில் திரைத்துறையிலுள்ள சிறந்த படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழா, மெல்போர்னிலுள்ள பாலீஸ் திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் ராம்சரண் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்திற்கான தூதராக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறந்த படத்திற்கான விருது ‘12த் பெயில்’ படத்திற்கும் சிறந்த நடிகைக்கான விருது ‘உள்ளொழுக்கு’ படத்திற்காக பார்வதி திருவோத்துக்கும் சமத்துவ விருது ‘டன்கி’ படத்திற்கும் பன்முகத்தன்மை சாம்பியன் விருது ‘ரசிகா துகல்’ படத்திற்காக ஆலியா பட்டுக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும் விமர்சகர் தேர்வில் சிறந்த நடிகராக ‘12த் பெயில்’ படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸிக்கும் சிறந்த படமாக ‘லாபாதா லேடீஸ்’ படத்திற்கும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெப் சீரிஸுக்கு அறிவித்த விருதில், ‘போச்சர்’ சீரிஸில் நடித்த நிமிசா சஜயன் தேர்வு செய்யப்பட்டார். தமிழ் சினிமா பொறுத்தவரை சிறந்த இயக்குநராக ‘மகாராஜா’ படத்திற்காக நித்திலன் சாமிநாதனுக்கும் ‘எக்ஸலென்ஸ் இன் சினிமா’ (Excellence in Cinema) என்ற கௌரவ விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அறிவிக்கப்பட்டது.