
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, போத்தனூர் தபால் நிலையம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளரான தென்மாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....
“பா.ரஞ்சித் அவருக்கு என்ன வேண்டுமென்று நிறைய இன்புட்ஸ் கொடுப்பார். அவர் சொல்லும்போது அது சுவாரசியமாக இருக்கும். பாடி, நடனமாடி கூட இன்புட்ஸ் கொடுப்பார். அதெல்லாம் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். என்னுடைய அசிஸ்டண்ட்டெல்லாம் என்ன இப்படிலாம் பண்றாருனு சிரிச்சிட்டாங்க.
நட்சத்திரம் நகர்கிறது ஸ்க்ரிப்ட் படிச்சுட்டு என்னோட சில கருத்துகளைச் சொன்னேன். அதெல்லாம் ரஞ்சித் கவனமாக குறித்துக்கொண்டார். அவர் இருக்கும் உயரத்திற்கு என்னிடம் கருத்துகேட்க வேண்டிய அவசியமே கிடையாது. திறந்த மனதுடன் கருத்து கேட்டு அதை அவர் ஏற்றுக்கொண்டது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
இந்தப் படத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று சந்தேகம் இருந்தது. பாடல் வெளியான பிறகும்கூட எனக்கு நிறைவாக இல்லை. ஆனால், ரிலீஸிற்குப் பிறகு கிடைத்த வரவேற்பை பார்த்தபோது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. நீலம் ப்ரொடக்ஷனோடு இணைந்து பணியாற்றுவதால் எனக்கு எந்த இடத்திலும் வாய்ப்பு மறுத்ததில்லை. எல்லோரும் எல்லா நிறுவனத்தோடும் இணைந்துதான் பணியாற்றுகிறார்கள். வேறு சிலருக்கு அதுபோல வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எனக்கு அதுபோல நேர்ந்ததில்லை".