Skip to main content

லாரன்ஸின் காஞ்சனா 3 படம் எப்போது...?

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
lawrence

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் காமெடி திகில் படமான காஞ்சனா 3 படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படம் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 2019ல் வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது  அறிவித்துள்ளது. இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த வேதிகா, மற்றும் பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கில் அமிதாப்?

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்குகிறார். 
 
amithabh bachan

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார்.
 
காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். 
 
தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூலம் வெற்றியை கண்டாலும், பழைய காஞ்சனா படங்களை போலதான் இந்த படமும் இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஹிந்தியில் காஞ்சனா என்ற பெயரை மாற்றி லக்‌ஷ்மி என்று தலைப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். 
 
காஞ்சனா முதல் பாகத்தில் கௌரவ தோற்றத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கசிந்து வரும் தகவலில் அமிதாப் பச்சன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

Next Story

பாலிவுட்டில் கால் பதிக்கும் லாரன்ஸ்... படப்பிடிப்பு தொடங்கியது...

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்குகிறார். 
 
kanchana

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார்.
 
காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். 
 
தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூலம் வெற்றியை கண்டாலும், பழைய காஞ்சனா படங்களை போலதான் இந்த படமும் இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஹிந்தியில் காஞ்சனா என்ற பெயரை மாற்றி லக்‌ஷ்மி என்று தலைப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.