இயக்குநர் பாலச்சந்தர், தனக்கென ஒரு மேக்கிங் ஸ்டலை உருவாக்கி இந்திய சினிமா அளவில் கவனம் பெற்றுள்ளார். கிட்டதட்ட் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 9 தேசிய விருதுகளையும், தமிழக அரசு வழங்கும் கலைமாமணி, அறிஞர் அண்ணா விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்தியாவில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதையும் வாங்கியுள்ளார்.
இவர் மறைந்து இன்றுடன் 10 வருடம் ஆகிறது. இதையொட்டி பாலச்சந்தர் குறித்து அவருடைய நினைவுகளை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், “எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தில் நடிகராக பாலச்சந்தர் கடைசியாக நடித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும்.— Kamal Haasan (@ikamalhaasan) December 23, 2024