![jaibhim movie selected 9th noida international film festival](http://image.nakkheeran.in/cdn/farfuture/GmVdfmnHawtKb8OjtP_cB9AzWLejs48OE3xvHpm05S0/1642654109/sites/default/files/inline-images/bhim.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினாலும் சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் 'ஜெய் பீம்' திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அந்தவகையில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடும் இவ்விழா, வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. சமீபத்தில் ஜெய் பீம் படக்காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 'ஜெய் பீம்' பெற்றது.