Skip to main content

'மாஸ்டர்' பட தயாரிப்பாளருடன் இணைந்த 'ரைட்டர்' பட இயக்குநர்!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

director franklin jacob joins seven screen studios new movie

 

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப்ராங்கிளின் ஜேக்கப் 'ரைட்டர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி போலீசாக நடித்துள்ளார். திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் தனது அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை பேசியுள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

 

ad

 

இந்நிலையில் இயக்குநர் ப்ராங்கிளின் ஜேக்கப் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்    நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ப்ராங்கிளின் ஜேக்கப் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளார்.இத்தகவலை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

காஷ்மீர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த விஜய் படக்குழு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vijay keo team thanked kashmir government

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாகப் பெரும் சாதனை படைத்தது.

முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் 7 நாட்களில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு அறிவித்தது. இப்படத்தின் கதை காஷ்மீரில் நடைபெறுவதாக அமைந்திருந்ததால், ஜம்மு அண்ட் காஷ்மீர் பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. 

இந்த நிலையில், லியோ படக்குழு ஜம்மு அண்ட் காஷ்மீர் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டியோஸ், அவர்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது, “காஷ்மீரில் எங்கள் படமான லியோ படத்திற்கு ஒத்துழைத்த ஜம்மு அண்ட் காஷ்மீர் அரசு, அதன் கவர்னர் மனோஜ் சின்ஹா, தகவல் துறை மற்றும் சுற்றுலாத் துறை என எங்களுக்கு பாதுகாப்பு அளித்த அனைத்து நிறுவனங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காஷ்மீர் எப்போதும் நமது எதிர்காலத் திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவி செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.