![Dhanush delights fans by releasing subsequent updates](http://image.nakkheeran.in/cdn/farfuture/O5W_RgYN9uOdMpRRrPN3I_ifFBLNPBPZYmE6sf15bFM/1654869648/sites/default/files/inline-images/59_16.jpg)
செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா 'அனுஷா' என்ற கதாபாத்திரத்திலும், பிரியா பவானி ஷங்கர் 'ரஞ்சனி' கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே 'திருச்சிற்றம்பலம்' படத்தின் கதாபாத்திரத்தின் அறிவிப்புகளை அடுத்தடுத்து படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன் படி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாரதி ராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் இவர்களின் கதாபாத்திரத்தின் பெயர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. பாரதி ராஜா 'சீனியர் திருச்சிற்றம்பலம்' என்ற பாசக்கார தாத்தா கதாபாத்திரத்திலும் பிரகாஷ் ராஜ் 'நீலகண்டன்' என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை தனுஷ் வெளியிட்டு வருவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Neelakandan… our genius Prakash Raj sir .. Thiruchitrambalam https://t.co/Qq101wGBM4— Dhanush (@dhanushkraja) June 10, 2022