![Coffee With Kadhal movie Thiyagi Boys Video released](http://image.nakkheeran.in/cdn/farfuture/lrClTpERMVSSedv8XvQqDVWDVl9jf1A5vMdQOULZwJY/1667399687/sites/default/files/inline-images/02_76.jpg)
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அவ்னி சினிமா மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'காஃபி வித் காதல்' படத்தின் 'தியாகி பாய்ஸ்' பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் காதல் தோல்வியினால் வலியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இப்பாடலில் வரும் 'நாங்க எல்லாம் தியாகி பாய்ஸ், காதலையே தியாகம் செய்வோம்' என்று வரும் வரிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பாடியுள்ளனர். பேரரசு என்பவர் வரிகள் எழுதியுள்ளார்.