![bnfxbsd](http://image.nakkheeran.in/cdn/farfuture/YBhf43A1enqTqWuvsVJSz5YsW_3PuYkBW5w3dqws4NM/1610433635/sites/default/files/inline-images/MV5BMzFhYWNlMGItYzlhYy00ZDA3LTgwNzEtZTQ4OGUzOGM2NTZmXkEyXkFqcGdeQXVyMzYxOTQ3MDg%40._V1_.jpg)
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் நேற்று இணையத்தில் கசிந்தது. மேலும் சில சமூக ஊடகங்களிலும் இப்படக் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இது திரையுலகினரை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது குறித்து இப்பட நடிகர் அர்ஜுன் தாஸ் ட்வீட் செய்துள்ளார். அதில்...
"கசிந்த எந்த ஒரு காட்சிகளையும் பகிர வேண்டாம் என்று மாஸ்டர் டீம் சார்பாக உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற எந்த வகையான விஷயத்தையும் நீங்கள் கண்டால், தயவுசெய்து அதை report@blockxpiracy.com என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.