![rajini](http://image.nakkheeran.in/cdn/farfuture/qc0Xnc7490llVCCwAZNlz2AaxLXn5KRp_kR7lMKMblY/1549893988/sites/default/files/inline-images/BBRu1Qi.jpg)
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான காலா படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இருந்தும் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த அளவு ரஜினியின் மாஸ் விஷயங்கள் இப்படத்தில் குறைவாக இருந்ததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான 2.0 படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி சுமார் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிபெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓர் அளவு பூர்த்தி செய்தது. இதையடுத்து ரஜினி தரப்பும் இதை கவனத்தில் கொண்டு அடுத்ததாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமான கதையில் ரஜினி நடிக்க முடிவெடுத்தது. அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தில் நடித்தார் ரஜினி. இப்படம் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்று மீண்டும் தான் என்றுமே சூப்பர்ஸ்டார் தான் என்பதை நிரூபித்தார் ரஜினிகாந்த். இதனால் சூப்பர்ஸ்டார் ரஜினி ஹேப்பி.
![rajini](http://image.nakkheeran.in/cdn/farfuture/5XLNXfsreylX9eZnhqwuc__KjKcxROin9dCVZLZP6Os/1549894020/sites/default/files/inline-images/DzGobQJU8AAuX66.jpg)
இதேபோல் ரஜினியுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணம் தற்போது நிகழ்ந்துள்ளது. ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்தார். பிறகு இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு தேவ் என்ற மகன் பிறந்தான். பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் ரஜினியும் மிகுந்த கவலையில் இருந்தார். இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிக்கும் தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் சமீபத்தில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதையடுத்து இவர்களுடைய திருமண வரவேற்ப ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதனைத்தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் திருமண சடங்குகள் நடந்தன. ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்று “ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி” என்ற பாடலுக்கு நடனம் ஆடி மீண்டும் கவலையை மறந்து உற்சாகமானார். இதையடுத்து சவுந்தர்யா விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நல்லபடியாக நடந்தது. விழாவில் ரஜினி மனநிம்மதியாக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இதனால் தந்தை ரஜினியும் ஹேப்பி.
![rajini](http://image.nakkheeran.in/cdn/farfuture/vPToT3hWMit_iUW0HNUMtfpsP30xRHgrHDQ8KYGjAx0/1549894052/sites/default/files/inline-images/maxresdefault_87.jpg)
இதையடுத்து ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என நீண்டநாட்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி கூடிய விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி ரஜினி விரைவில் அரசியல் பிரவேசம் செய்யும் பட்சத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் ரஜினி ஹேப்பியா...? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பாப்போம்....