இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை ஐந்து கோடி பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவ் செய்வது சாதனையாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

விராட் கோலியை தொடர்ந்து இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் இந்தியர்களில் பிரியங்கா சோப்ரா 49.9 மில்லியன் ஃபாலோவர்ஸ், தீபிகா படுகோன் 44.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கின்றனர்.
விராட் கோலி இதுவரை தனது இன்ஸ்டாகிராம் ஐடியில் 930 பதிவுகளை மட்டுமே பதிவிட்டிருக்கிறார். விராட் கோலி 480 பேரை ஃபாலோவ் செய்கிறார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதன் மூலம் ஒரு போஸ்டிற்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபலங்கள் லிஸ்ட்டில் இந்திய பிரபலமான விராட் கோலி 1.35 கோடி வரை சம்பாதித்து உலகளவில் 9 வது இடத்தில் இருக்கிறார்.
இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் முதல் நபராக கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். சுமார் 200க்கும் மேற்பட்ட ஃபலோவர்ஸ் அவர் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.