அடுத்த ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்ப்பது குறித்து இம்மாதம் 24-ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமீரகத்தில் நடந்த 13-ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட 8 அணிகள் பங்கெடுத்தன. 2021-ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின்போது கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட இருப்பதாக முன்னர் தகவல் வெளியாகியது. மேலும், அந்த அணி குஜராத்தை மையப்படுத்திய அணியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ஒரு அணிக்கு பதிலாக இரு அணிகளைக் கூடுதலாக சேர்த்து ஐபிஎல் தொடரில் பங்கெடுக்கும் அணிகளின் எண்ணிக்கையை 10-ஆக உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தற்போது வெளியாகியுள்ளத் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்தான விவாதம் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ வருடாந்திரக் கூட்டத்தில் நடைபெற உள்ளது.
அதானி குழுமம் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா புதிய அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.