2019-ம் ஆண்டு உலககோப்பை வரும் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான ரெஃப்ரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுந்தரம் ரவி எனும் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.
இவர்தான் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்த மும்பை - பெங்களூரு போட்டியில் மல்லிங்காவின் இறுதி பந்தின் ‘நோ பால்’ கொடுக்காமல் விட்டது. இதனால் இவர் பல விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக பெங்களூரு அணியின் கேப்டன் விரட் கோலி “நடுவர்கள் அவர்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்” என்றார்.
இவர் 2019-ம் ஆண்டுக்கான உலககோப்பை ரெஃப்ரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர்த்து ரெஃப்ரிகளில் இலங்கையிலிருந்து ரஞ்சன் மதுகல்லே இடம் பெற்று இருக்கிறார். இவருக்கு இது ஆறாவது உலககோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிறிஸ் பிராட் மற்றும் ஜெஃப் குரோவ் ஆகியோர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இது நான்காவது உலககோப்பை. மேலும் டேவிட் பூன், ஆண்டி பைக்ரோஃப்ட் மற்றும் ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எல்லம் ரெஃப்ரிகள் இவர்களை தவிர்த்து கள நடுவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஆட்டத்தை இடையில் நிறுத்துவது, நேரம் கடந்து ஆட்டம் போகும்போது அதற்கு அபராதம் விதிப்பது மற்றும் ஆட்டம் தொடர்பான பெரும் முடிவுகளை எடுப்பது ரெஃப்ரிகளின் பணி என்பது குறிப்பிடத்தக்கது.