Published on 05/06/2019 | Edited on 05/06/2019
இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி 2 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் ஒன்றில் படுதோல்வியும் மற்றொன்றில் போராடி வெற்றியும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அந்த அணியின் பயிற்சியாளர் ஹதுரசிங்க, "நாங்கள் விளையாடிய இரண்டு பிட்ச்களுமே ஒருநாள் கிரிக்கெட்டுக்கு லாயக்கற்றது. மற்ற அணிகள் விளையாடிய போட்டிகளின் பிட்ச்களைப் பார்த்தால் கொஞ்சம் பிரவுன் அல்லது வெள்ளையாகக் கூட இருந்தது. ஆனால் எங்களுக்கு மட்டும் கிரீன் டாப் பிட்ச்கள். எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வாறு அமைகிறது என தெரியவில்லை" என கூறினார். விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே க்ரீன் பிச்சில் இலங்கை அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.