இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஷீகர் தவானுக்கு 3 வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த போட்டியில் பேட்டிங் செய்யும்போது பந்து தாக்கியதில் தவான் கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார்.
இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் மீதமுள்ள ஆட்டங்களுக்கு இந்திய அணியில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரில் யாரேனும் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடக்க ஆட்டக்காரராக அவருக்கு பதில் ராகுல் இறக்கப்படலாம் எனவும் கணிக்கப்படுகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் காயமடைந்து இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.