Skip to main content

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது...

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

neymar

 

கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதன் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றனர். இந்தக் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபல கால்பந்து வீரரான நெய்மருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான நெய்மர், தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அவரது அணி நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவருடன் சேர்த்து ஏஞ்சல் டிமரியா மற்றும் லியான்டிரோ ப்ரேடஸ் என்ற இருவீரர்களுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி அணியின் பிற வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

 

 

Next Story

பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மரை ஹோட்டல் ரூமில் தாக்கிய பெண்! வைரல் வீடியோ!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

நெய்மருக்கு சமீபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தினால் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.பின்பு காயத்தில் இருந்து குணமடைந்த நெய்மர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில் இது சம்மந்தமான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


 

இந்நிலையில் அந்த பெண்ணும் நெய்மரும் அதே ஹோட்டல் அறையில் சண்டை போடுவது மாதிரியான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாகியுள்ளது.அந்த வீடியோவில் அடிக்க வந்த பெண்ணிடம் என்னை அடிக்காதே என்று கூறுகிறார்.பின்பு அந்த பெண் நன் அடிக்க விட்டால் நீ என்னை தாக்கி விடுவாய் என்றும் கூறுகிறாள்.பின்பு நேற்று நீ இப்படி தானே என்னை அடித்துவிட்டு இங்கு தனியே இங்கயே  விட்டு சென்றாய் என்றும் கூறுகிறார்.இந்த விடியோவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நெய்மர்.

Next Story

நிமிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
Boxing

 

 

 

உலகிலேயே அதிக அளவிலான சம்பளம் வாங்கும் லிஸ்டில் இதுவரை இருந்தவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் குத்துச்சண்டை வீரரான சால் கானலோ அல்வரேஸ். டாஜன் எனும் விளையாட்டுப் போட்டிகள் ஒளிபரப்பும் நிறுவனத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் போட்டதில் அல்வரேஸ் இந்தப் புகழைப் பெற்றிருந்தார். 
 

தோராயமாக ரூ.2,700 கோடி வரையிலான இந்த ஒப்பந்தத்திற்காக இவர் 11 சண்டைகள் போடவேண்டும். சராசரியாக ஒரு சண்டைக்கு 33 மில்லியன் டாலர் வரை அவருக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது. இதன்மூலம், வருங்காலத்தில் அல்வரேஸின் சம்பளம் நிமிடத்திற்கு பத்தாயிரம் ரூபாயாக மாறியிருக்கும். 
 

கடந்த 13 ஆண்டுகளாக நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த யங்கீஸ் ஸ்லக்கர் ஜியான்கார்லோ ஸ்டாண்டன் எனும் பேஸ்பால் வீரரின் சம்பளம் மட்டுமே உலகளவில் விளையாட்டு வீரரால் அதிகபட்சமாக கருதப்பட்டது. அதனை அல்வரேஸ் முறியடித்துள்ளார். அல்வரேஸுக்கு நெருக்கமாக நெய்மர் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் ஒப்பந்தங்கள் வந்திருந்தாலும், அதனை முறியடிக்கப் போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.