Published on 13/08/2020 | Edited on 24/08/2020

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், ஓய்வு பெற்ற மூத்த வீரர்களை மாநில கிரிக்கெட் அணியினர் சரியாக பயன்படுத்தினால் அவர்கள் அனுபவம் வீண் போகாது எனக் கூறியுள்ளார்.
பிசிசிஐ நடத்திய வெப்மினாரில் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன. அதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் டிராவிட், "மூத்த வீரர்களை இங்குள்ள மாநில கிரிக்கெட் அணிக்குழுவினர் பயன்படுத்த வேண்டும். அவர்கள் சார்ந்த துறையில் சரியாக பயன்படுத்தும்போது மூத்த வீரர்களின் திறமை வீண்போகாது. அனைவரும் சேர்ந்து பயிற்சி எடுப்பது தற்சமயத்தில் சிரமம் என்பதால் ஆன்லைன் மற்றும் நேரடிப் பயிற்சி என வீரர்களைப் பிரித்து பயன்படுத்த வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.