ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின், சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் எதிர்பாராத விதமாக தோனி கேப்டனாக பொறுப்பேற்றது மிகப்பெரிய உற்சாகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் முகமது சேஷாத் சதமடித்து அசத்தினார். பின்னர் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி 252 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.
இதற்கிடையில், இந்திய அணியின் ஓப்பனர் கே.எல்.ராகுல், 21-வது ஓவரின்போது ரஷீத்கான் வீசிய பந்துக்கு நடுவர் எல்.பி.டபில்யூ. வழங்கியதை அடுத்து ரிவியூவ் கேட்டார். ஆனால், அந்த ரிவியூவ் ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதமாக அமைந்தது. இதனால், அடுத்தடுத்து வந்த தோனி மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு தவறாக வழங்கப்பட்ட நடுவர் எல்.டபில்யூ. தீர்ப்புகள், ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.
எனவே, தனது விக்கெட்டின் போது ரிவியூவ் கேட்டது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது. தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் களத்தில் இருந்திருந்தால் போட்டியின் போக்கு மாறியிருக்கும் என ராகுல் தெரிவித்துள்ளார்.