Skip to main content

பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்! - சச்சின் அறிமுகம் செய்த சேலஞ்ச் (வீடியோ)

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

பிடித்த விளையாட்டை தொடர்ந்து விளையாடுமாறு சச்சின் தெண்டுல்கர் இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

Sachin


 

 

கடந்த மே 22ஆம் தேதி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ட்விட்டர் வழியாக ஃபிட்னஸ் சேலஞ்சை அறிமுகம் செய்தார். நாம் ஃபிட்டாக இருந்தால் தேசம் ஃபிட்டாக இருக்கும் என்ற நோக்கத்தைப் பரப்பும் இந்த சேலஞ்சில் ஒருவர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, அதில் சிலரை நாம் டேக் செய்து ஊக்கப்படுத்தவேண்டும். அதன்படி, அவர் விராட்கோலி, சாய்னா நேவால் உள்ளிட்டோரை டேக் செய்தார்.
 

 

 

இந்த சேலஞ்ச் குறித்து இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்ட நிலையில், நடிகை அனுஷ்கா சர்மாவின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். அதற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உலக கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தெண்டுல்கர், கிட்அப் சேலஞ்ச் ஒன்றை தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளார். அதில் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும், நேசிக்கும் விளையாட முன்வர வேண்டும். அதற்காக தயாராகுங்கள் என வலியுறுத்தி, தனது கிரிக்கெட் உடுப்பை அணியும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும், அதில் இந்திய கால்பந்தாட்ட வீரர் சந்தேஷ் ஜிங்கன், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பி.வி.சிந்து என பலரையும் டேக் செய்துள்ளார்.