நிடஹாஸ் கோப்பை இறுதிப்போட்டியின் கடைசிப் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு இந்தியாவை ஜெயிக்கவைத்தார் தினேஷ் கார்த்திக். அந்த ஒரு ஆட்டமே அவர்மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. அதேசமயம், பெஸ்ட் ஃபினிஸர் என்று புகழப்படும் தோனிக்கு மாற்று இவர்தான் என்றும் சொல்லாதவர்கள் இல்லை.
தோனிக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்தவர் தினேஷ்கார்த்திக். 32 வயதாகும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால், களத்தில் தன்னை நிரூபிக்க இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறது.
தோனி - தினேஷ் கார்த்திக் ஒப்பீடு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தினேஷ் கார்த்திக், ‘நான் படித்துக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் தோனிதான் டாப்பர். எனவே, என்னையும், அவரையும் ஒப்பிடுவதே ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் என் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினேன். இந்த வெற்றி புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. அதேசமயம், தோனியின் பயணம் முற்றிலும் மாறுபட்டது. நாம் அவரிடத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தற்கால இளம் வீரர்களுக்கு அவர் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.