பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சாகித் அஃப்ரிடியை, இளம் வீரர் சாஹீன் அஃப்ரிடி கிளீன் பவுல்டு ஆக்கினார்.

துபாயில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் குவாலண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சாகித் அஃப்ரிடி களத்தில் இருந்தார். எதிரணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் ஷா அஃப்ரிடி வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் கிளீன் பவுல்டு ஆகி பெவிலியன் திரும்பினார்.

Advertisment

எப்போதும் விக்கெட் எடுத்தவுடன் உயரமாகத் தாவுவதை வழக்கமாகக் கொண்டவர் சாஹீன் அஃப்ரிடி. ஆனால், மூத்த வீரருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் அமைதியாக சென்றுவிட்டார். இரண்டாவதாக களமிறங்கிய லாகூர் குவாலண்டர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஆட்டம் எந்தவித முடிவும் தெரியாமல் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறைப்படி லாகூர் குவாலண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.