Skip to main content

சி.எஸ்.கே. கலாச்சாரம்.. தோனியுடன் வலைப்பயிற்சி.. உற்சாகத்தில் சாண்ட்னர்!

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது குறித்த பல உற்சாகமான கருத்துகளை நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சாண்ட்னர் வெளியிட்டுள்ளார்.

 

Santner

 

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மிட்சல் சாண்ட்னர். சி.எஸ்.கே.யில் விளையாடுவது குறித்து அவர், ‘சி.எஸ்.கே. கேப்டன் தோனியுடன் போட்டிகளில் விளையாடுவதை விட, வலைப்பயிற்சியில் ஈடுபடுவதிலேயே நான் ஆர்வமாக இருக்கிறேன். தல தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் பேசுவதற்கும், விளையாடுவதற்கும், சி.எஸ்.கே. கலாச்சாரத்தில் ஐக்கியமாகுவதற்குமான என் எதிர்பார்ப்புகளுக்கு எல்லையே இல்லை’ என தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்தியாவின் விளையாட்டுச் சூழல் பற்றி அவர், ‘இந்தியாவின் பெரும்பாலான மைதானங்களில் இருக்கும் மெதுவான பிட்சுகள், என்னைப் போன்ற ஸ்பின்னர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. மேலும், மைதானம் முழுவதும் ரசிகர் கூட்டத்தால் நிரம்பி வழியும் காட்சியை, சொந்த மண்ணில் கூட காண முடியாது’ என உற்சாகமாக பேசியுள்ளார்.

Next Story

ஐ.டி. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்; சென்னையில் பயங்கரம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
The brutality of a transgender who worked in IT; Terrible in Chennai

குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநங்கை ஒருவர், பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த நபர்கள் சிலர் திருநங்கையைப் பார்த்தவுடன் அவர் குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனப் பேசிக்கொண்டே அவரை நெருங்கினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருநங்கையோ 'தான் இந்த பகுதியில் தான் வசித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார். இருப்பினும் விடாத அந்த நபர்கள், அவரைத் தாக்கியதோடு அரை நிர்வாணப்படுத்தி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

அந்த பகுதியில் இருந்த சில நபர்களும் திருநங்கையைக் கொடூரமாகத் தாக்கினர். இந்த தகவல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் மின் கம்பத்தில் கட்டப்பட்ட திருநங்கையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருநங்கை ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவிய நிலையில், வீடியோ பதிவு அடிப்படையில் முருகன், நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோகன், அசோக்குமார் என்பவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில், சென்னையில் குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளை அறுத்து எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், அந்த வீடியோவில் குழந்தைகளை கடத்தும் நபர் போலவே திருநங்கை இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவில், ''நீ தான இது" என நபர்கள் சிலர் மொபைலில் உள்ள வீடியோவை காட்டி கேள்வி எழுப்பினர். ஆனால் திருநங்கை 'அது நான் இல்லை' என சொல்லியும் கேட்காமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

அசத்தலாய் ஆண்டுவிழா நடத்திய அரசுப்பள்ளி!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Chennai middle school annual day celebrations

சென்னை நொளம்பூர் பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியின் 2023-24 கல்வி ஆண்டிற்கான ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு வருகைபுரிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை பேண்ட் வாத்தியங்கள் முழங்க தலைமையாசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வரவேற்றனர். நிகழ்வானது எல்கேஜி மாணவிகளின் நடனத்துடன் ஆரம்பமானது. எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் வகுப்பு வாரியாக கருத்தாழமிக்க நாடகங்கள், வண்ண உடையுடனும் கூடிய நடனங்களை நிகழ்த்திக் காண்பித்தார்கள். இது காண்போரை ரசிக்க வைத்தது

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய சென்னை மாநகராட்சியின் 143வது மாமன்ற உறுப்பினருமான வே.ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். வண்ண வண்ண கொடிகளாலும், விளக்குகளாலும் அப்பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது. முகப்பேர், நொளம்பூர், மதுரவாயில் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகப்படியான தனியார் பள்ளிகள் இயங்கி வந்தாலும் அதற்கு நிகராக அரசுப் பள்ளியும் சிறப்பாய் திகழ முடியும் என்று, இந்த ஆண்டு விழாவை தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.