
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது தோல்வியை சந்தித்தது.
நேற்றிரவு துபாயில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து, இரண்டாவது முறையாக தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை அணியில் டூ பிளஸ்சி 43, கேதர் ஜாதவ் 26, தோனி 15, வாட்சன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனிடையே, அபுதாபி ஷேக் சயித் மைதானத்தில் இன்று (26/09/2020) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.