இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்து. 289 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆட தொடங்கிய இந்திய அணி 4 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த தோனியும், ரோஹித் ஷர்மாவும் நிதானமாக விளையாடினர். 51 ரன்களில் தோனி ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. தோனி 51 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக 10,000 ரன்கள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனது நான்காவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த நாட்டில் 4 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.