Skip to main content

விராட் கோலி அதற்கு சரிப்படமாட்டார்! - கலாய்க்கும் மைக்கேல் வாகன்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், விராட் கோலி இரண்டு ரிவியூக்களையும் இழந்தது குறித்து, இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். 
 

Virat

 

 

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை வேகமாக ஆல்-அவுட் ஆக்கிவிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில், இரண்டு முறை டி.ஆர்.எஸ். வாய்ப்பைப் பயன்படுத்தினார் கேப்டன் விராட் கோலி. ஆனால், துரதிர்ஷ்டவஷமாக இரண்டு வாய்ப்புகளுமே கைநலிவிப் போயின. 
 

முதலில் 9.2-வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்து, ஓப்பனர் கீட்டன் ஜென்னிங்ஸின் பேடில் பட்டது. உடனடியாக லெக் விக்கெட் கோரியநிலையில், நடுவர் நிராகரித்தார். இதன்பிறகு கேட்கப்பட்ட ரிவியூவும் சாதகமில்லாமல் போனது. பின்னர், 11.6-வது ஓவரில் மீண்டும் ஜடேஜா வீச, இம்முறை அலீஸ்டர் குக் பேடில் பந்து பட்டது. இந்த முறையும் நடுவர் நிராகரிக்க, டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது. அதுவும் தோற்றுப்போனது. இதனால், இந்திய அணி கொடுக்கப்பட்ட இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்புகளையும் நலுவவிட்டது. 
 

இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், “உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அது உண்மையாகவும் இருக்கட்டும்.. ஆனால், அவர்தான் உலகின் மோசமான ரிவியூவர் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.