ரிஷப் பந்த்தின் கன்னத்தில் அறையத் தயாராக உள்ளதாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்
உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார். ரூர்க்கி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பலத்த காயம் அடைந்தார். உத்தராகண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ரிஷப் பந்த் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
ரிஷப் பந்த்திற்கு தொடர்ச்சியான சிகிச்சைகள் வழங்கப்பட்டு அவர் உடல்நலத்தில் தேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரின் முதுகெலும்பாக செயல்படும் ரிஷப் பந்த் விபத்து காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்திய அணியில் 5 ஆவது இடத்திற்கான வீரர்கள் தேர்வு குறித்து குழப்பம் ஏற்பட்டது. இதனால் தற்போது ஷிகர் பரத் ஆஸ்திரேலியா உடனான பார்டர் கவாஸ்கர் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு விக்கெட் கீப்பராக செயல்படுகிறார்.
இந்நிலையில் ரிஷப் பந்த்தின் கன்னத்தில் அறையத் தயாராக உள்ளதாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். கார் விபத்தினால் காயமடைந்துள்ள ரிஷப் பந்த்தினால் அணியின் ப்ளேயிங் 11ல் பல சிக்கல்கள் உருவாகியுள்ளதாக கபில்தேவ் குற்றம் சாட்டினார்.