Skip to main content

பாண்டியா ஆடிய தோனி ஷாட்... உலக்கோப்பையில் விளையாடுவாரா?

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடரில் முக்கிய ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருப்பார். ஆனால் காயம் மற்றும் டி.வி. நிகழ்ச்சியில் பெண்களை குறித்து பேசிய சர்ச்சை காரணமாக சில மாதங்களாக சர்வதேச அணியில் நிரந்தரமாக விளையாடவில்லை. ஆசியக்கோப்பைக்கு பிறகு18 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் 3 போட்டிகளில் மட்டுமே பாண்டியா விளையாடியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில் பாண்டியா கட்டாயமாக இருப்பார்.
 

hardik dhoni

 


தற்போது ஆல்ரவுண்டர்களாக இந்திய அணியில் ஜடேஜா, விஜய் சங்கர் ஆகியோர் விளையாடினார்கள். நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஜடேஜா எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. விஜய் சங்கர் பேட்டிங்கில் கலக்கினாலும், பவுலிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பாண்டியா அளவிற்கு சங்கர் மற்றும் ஜடேஜா விளையாடாத காரணத்தால் பாண்டியாவின் பிட்னஸ் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
 

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியின்போது ஹர்திக் பாண்டியா தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்தினார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் எந்த சர்வதேச தொடரும் இல்லாத காரணத்தால் பாண்டியாஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
 

ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதியை பொறுத்துதான் அணியின் காம்பினேசன் இருக்கும். இவரை பொறுத்தவரை சோர்ந்து கிடக்கும் பீல்டிங் யூனிட்டிற்கு வலுசேர்ப்பார். பவுலிங்கிலும் தனது முழு கோட்டாவை பூர்த்தி செய்வார். பேட்டிங்கில் எதிரணி பவுலர்களை திணற செய்வார். இப்படிப்பட்ட ஒரு ஆல்ரவுண்டருக்கு மாற்று இல்லை.
 

இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் 731 ரன்கள், பேட்டிங்சராசரி 30 மற்றும் 44 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். சென்ற வருடம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆல்ரவுண்டராக பங்களித்திருந்தார். 140+கி.மீ. வேகத்திலும் பந்துவீசக் கூடியவர்.
 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வர இந்த ஐ.பி.எல். தொடர் பாண்டியாவிற்கு பெரிதும் உதவும். 2018-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 13 போட்டிகளில் 260 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 133.33 மற்றும் 18 விக்கெட்கள் எடுத்திருந்தார்.