Skip to main content

‘பலநாள் கனவே ஒரு நாள் நனவே..’- பாக். பேத்திக்காகக் காத்திருக்கும் இந்தியத் தாத்தா!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Pakistani cricketer Hasan Ali's daughter met by her grandfather in India for first time

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, இந்தியாவை சேர்ந்த லியாகத் கானின் மகள் சாமியா அர்சூவை திருமணம் செய்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பயணம் செய்ய முடியாததால், நான்கு வருடங்களாகியும் கான் தனது பேத்தியின் குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், தற்போது இத்தனை வருடங்கள் கழித்து அதற்கான நேரம் கைகூடி இருக்கிற செய்தி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

 

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்தியா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த லியாகத்தின் மகள் சாமியா அர்சூவை 2019ம் ஆண்டு துபாயில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், சாமியாவால் பாகிஸ்தான் எல்லையை கடந்து இந்தியா பயணித்து தனது குடும்பத்தை பார்க்க முடியாதே சூழலே இருந்துள்ளது. ஹரியான மாவட்டம் நுஹ் மாவட்டத்தில் வசித்து வரும் இவரின் தந்தை லியாகத் காணும் தனது பேத்தியை கையில் ஏந்த முடியவில்லையே என்று ஏங்கும் நிலைக்கு சென்றுள்ளார். ஆனால், ஹசன் அலி தற்போது உலகக் கோப்பை விளையாட இந்தியா வருவதால் தனது மனைவியின் குடும்பத்தை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தது. அதிலும்,  நசீம் ஷா என்ற பவுலர் காயத்தின் காரணமாக விலகவே ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் தேர்வானார்.

 

எனவே, தனது மகளின் குடும்பம் இந்தியா வருவது குறித்து லிகாயத் கான் கூறுகையில், ‘எனது நாங்கள் மீண்டும் அகமதாபாத்தில் சந்திப்போம் என நம்புகிறேன். என்னால் பேரக்குழந்தையை கையில் ஏந்தும் வரை காத்திருக்க முடியவில்லை. நான் எனது கல்லூரி காலத்தின் போது படித்த ரூமியின் கவிதையின்படி தான் வாழ்ந்து வருகிறேன். அது, ‘உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள்; கூட்டம் சொல்வதை அல்ல’ என் மகள் சாமியா எமிரேட்ஸ் ஏர்லைனில் விமானப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

 

அப்போது, தனது நண்பர் மூலம் ஹசன் அலியை துபாயில் சந்தித்து இருக்கிறாள். பின், ஹசனை பற்றி என்னிடம் தெரிவிக்க, நானும் அவளுடைய  முடிவை மறுக்கவில்லை. மகளின் மீது என்னுடைய தீர்மானங்களை திணிக்கையில் நான் கற்ற கல்விக்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? சாமியா படித்தவள், சுதந்திரமானவள். முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை யார் கவனிக்கப் போகிறார்கள்? நீ யாரை திருமணம் செய்துகொண்டாலும் பரவாயில்லை. அவள் கடைசி வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு சென்ற எங்களுடைய குடும்பங்கள் பாகிஸ்தானில்தான் வசித்து வருகின்றனர். ஹசன் அலியும் அன்புள்ளம் கொண்டவர் தான்." என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

 

மேலும் லியாகத்,  ஹசன் அலியிடம் இந்திய அணியை சந்திக்க உதவவும் விராத் கோலியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14, அஹமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் மீது காவல்நிலையத்தில் புகார்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Complaint against  Mitchell Marsh at Uttar Pradesh Police Station

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், முகமது சிராஜ் மைதானத்திலேயே அழுதார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று  மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இது தொடர்பாக ஆஸ்திரேலிய  மிட்செல் மார்ஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பண்டிட் கேசவ் என்பவர், உலகக் கோப்பையை அவமதிக்கும் வகையில் மிட்செல் மார்ஷ் பதிவிட்ட புகைப்படம் 140 கோடி இந்திய மக்களை புண்படுத்தியுள்ளது. அதனால் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்க வேண்டும் என்று அலிகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்