Skip to main content

கிரிக்கெட் வீரரின் முகநூல் பக்கத்தில் இருந்து சென்ற ‘ஐ லவ் யூ’ குறுஞ்செய்திகள்!

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
கிரிக்கெட் வீரரின் முகநூல் பக்கத்தில் இருந்து சென்ற ‘ஐ லவ் யூ’ குறுஞ்செய்திகள்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் முகநூல், ஜிமெயில், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களும் அடையாளம் தெரியாத நபரால் ஹேக் செய்யப்பட்டிருந்தன.



சிராஜின் முகநூல் பக்கத்தில் இருந்து அவரது நண்பர்களுக்கு ‘ஐ லவ் யூ’ போன்ற குறுஞ்செய்திகள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்த நிலையில், இது அவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சிராஜ் ஐதராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

முகமது சிராஜின் சமூகவலைதளப் பக்கங்களை ஹேக் செய்தவர், தனது செல்போன் எண்ணை பாஸ்வேர்டாக பயன்படுத்தி இருந்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் எண் பதிவு செய்யப்பட்ட முகவரியில் விசாரித்தபோது, பேகும்பேட் என்ற பகுதியில் ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவரின் 14 வயது சிறுவன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பின்னர், தனது சமூக வலைதளப்பக்கங்களில் இருந்து சிராஜ் நடந்த விஷயங்களை விவரித்து, தெலங்கானா காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்