Skip to main content

கலைஞர் நூற்றாண்டு; அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆய்வு பூங்க அமைக்க கோரிக்கை

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
Request to set up kalaignar Centenary Study Park in Annamalai University

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆறு.அன்பரசன், பேராசிரியர் பழனிவேல்ராஜா ஆகியோர் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். 

அந்த மனுவில், கலைஞர் நூற்றாண்டு நினைவையொட்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த புதுமை ஆய்வு பூங்கா அமைக்கப்பட வேண்டும். இதனால் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் உயர் ஆய்வுகள் சமூக பயன்பாட்டிற்கு உரியதாக இருக்கும்,  பல்கலைக்கழகம் அமையப்பெற்ற மாநிலத்தின் வழக்கு மொழியில் தொகுத்து ஆய்வுகளை வெளியிட்டால் உயர்கல்வி என்பது உண்மையில் உயிர் பெறும். தமிழ்நாட்டில் அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழுக்காகவும் தமிழ் இசைக்காகவும் உருவாக்கப்பட்ட பழம்பெரும் திராவிட வளர்த்த பல்கலைக்கழகமாகும்.  அதேபோல் தமிழர்களுக்கான மாண்பினை மேம்பட செய்யவும்.

அதேபோல் தமிழ் மொழியின் பெருமிதங்களை உலகறிய செய்த வருமான திராவிடத்தை அரியணை ஏற்றியவருமான கலைஞர் கருணாநிதி தமிழ் கூறும் நல் உலகுக்கு ஆற்றிய தொண்டினை போற்றும் வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த புது புதுமை ஆய்வு பூங்கா அண்ணாமலை பல்கலைகழகத்தில் தோற்றுவிக்க வேண்டும்.  ஆய்வு பூங்கா இப்ப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டால் பல்கலைக்கழகத்தின் தோற்றுனது கனவும்,  முத்தமிழறிஞர் கலைஞரின் கனவும் மெய்ப்பட வாய்ப்புள்ளது.

மேலும் இந்த பூங்காக்கள் இதர பல்கலைக்கழகத்திலும் நிறுவப்படுவதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்மாதிரியாக திகழும்.  எனவே திட்ட முன்மொழிவினை செப் 30-ந்தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். அதில்  புதுமை ஆய்வு பூங்கா அமைத்திட அறிவிப்பு வழங்க வேண்டும் என அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

சார்ந்த செய்திகள்