Skip to main content

ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்களுக்கு வழிகாட்டும் ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக்!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

Brad Hogg

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

 

முதற்கட்டமாக நடந்துவரும் ஒருநாள் தொடரில், தொடர்ச்சியாக இரு வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியும், ஆறுதல் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியும் ஆயத்தமாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் கடந்த இரு போட்டிகளிலும் சதமடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மித் விக்கெட்டினை வீழ்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எடுத்த எந்த முயற்சியும் கைகூடவில்லை.

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், ஸ்மித் விக்கெட் குறித்துப் பேசுகையில், "ஸ்டீவ் ஸ்மித் களத்திற்கு வரும்போது இந்திய அணிக்குப் பெரிய பிரச்சனையாக உள்ளது. பவுன்சர் வீழ்த்தி அவர் விக்கெட்டை வீழ்த்த இந்திய பவுலர்கள் முயற்சிக்கவே இல்லை. அவர் விக்கெட்டை நோக்கி துல்லியமாக மட்டுமே பந்துவீசினார்கள். ஷார்ட் பிட்ச் வகை பந்துகள்தான் அவரது பலவீனம் எனும் போது அதை ஏன் முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை. அவர் பின் காலை வைத்து விளையாடுவதைப் போல இந்தச் சுற்றுப்பயணம் முழுவதும் இந்திய பவுலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.