Skip to main content

“உள்ளாடையை தேர்வு செய்வதும், வியர்வையை சமாளிப்பதும் எப்படி?” - விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் அருணாச்சலம்

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

“Underwear selection and sweat management” – explains Dr. Arunachalam

 

உடையின் முக்கியத்துவம் பற்றியும் அதனால் ஏற்படுகிற சருமப் பிரச்சனைகள் குறித்தும் சில கேள்விகளை மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்காக அவர் அளித்த விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.

 

உடலில் தலைப்பகுதியிலிருந்து உருவாகிற வியர்வையானது கீழ் வரை இறங்கும். அப்போது தொடை இடுக்கில் உறிஞ்சும் தன்மையிலான உள்ளாடை போட வேண்டும். காட்டன் உள்ளாடைகளும் பனியன் துணியிலான உள்ளாடையும் உறிஞ்சும். பட்டை வைத்து போடுகிற பாலிஸ்டர் உள்ளாடை உறிஞ்சும் தன்மை கொண்டது அல்ல .

 

பட்டையா வெளியே தெரிகிற உள்ளாடைகள் எல்லாம் வியர்வையை உறிஞ்சும் தன்மை அற்றவை. அவையெல்லாம் போடக்கூடாது. சிலரோ ஃபேசன் என்று அதை பயன்படுத்துகிறார்கள். அதனால் எந்தவிதப் பயனும் இல்லை

 

வியர்வையை ஒரு சுத்தமான துணி கொண்டு அடிக்கடி துடைக்க வேண்டும். அப்படியே வியர்வையை வழிய வழிய விட்டு விடக்கூடாது. நேரம் கிடைக்கும் போது வியர்வை படிந்த இடத்தை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். கழுவி விட்டு அப்படியே விட்டு விடக்கூடாது. ஈரம் படிந்திருக்கிற இடத்தையும் துடைக்க வேண்டும்.

 

காலையும் மாலையும் குளிக்க வேண்டும். இடுப்புக்கு மேலேயும் இடுப்புக்கு கீழேயும் என்று இரண்டு பாகமாக பிரித்து குளிக்க வேண்டும். அக்குள், தொடையின் நடுப்பகுதி, நகப்பகுதி வரை தனித்தனியாக கவனம் எடுத்து குளிக்க வேண்டும். காட்டன் துணி கொண்டு துடைக்க வேண்டும்.