குழந்தைப் பெற்றவுடன் பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.உதாரணமாக உடல் பருமன் ,கருப்பை புண்கள் ,முடி உதிர்தல் போன்றவற்றை எப்படி உணவு மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பார்க்கலாம் . சீரகத்தூள் கலந்த நீரை கொதிக்க வைத்து, குடித்து வர கருப்பை புண்கள் அகலும். நெய் விட்டு வறுத்த சீரகத்தை காய்கறிகளில் சேர்த்து சாப்பிட, பால் அதிகமாக சுரக்கும். 10 கிராம் வறுத்த சீரகத்துடன், 100 கிராம் சர்க்கரை சேர்த்து பாலுடன் குடித்து வர, பால் அதிகரிக்கும். பிரசவத்திற்கு பின், வேப்ப இலைசாற்றை முதல் நாள் குடித்து வர, கருப்பபை சுருங்கும்.
முருங்கை கீரையை வதக்கி, அதிக காரம் போடாமல் விருபத்திற்கேற்றவாறு பக்குவம் செய்து உண்டு வந்தால் நன்றாக பால் சுரக்கும். பப்பாளி காயை உணவுடன் சமைத்துண்ண, பால் அதிகம் சுரக்கும். 1/2 தேக்கரண்டி பொடித்த பட்டையை, இரவு ஒரு கப் பாலுடன் குடித்து வர, பால் அதிகம் சுரக்கும். ஒரு தேக்கரண்டி சீரகதூளுடன் சர்க்கரை சேர்த்து சூடான பாலுடன் தொடர்ந்து குடித்து வர, பால் அதிகரிக்கும். 2 தேக்கரண்டி சீரகத்தை அரை கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரை 1/2 கப் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனும் சேர்த்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர பால் அதிகரிக்கும். நமது முன்னோர்கள் பிரசவித்த பெண்களுக்கு அரைகீரையை கொடுப்பார்கள்.
இது சீதளம் வராமல் தடுத்து, இரத்த போக்கால் பலவீனம் அடைந்தவர்களை தேற்றி, உடலுக்கு சக்தி கொடுக்கின்றது. தாய்க்கும் சேய்க்கும் நோய் தடுப்பு சக்தியை அளிக்கிறது. உடலுக்கு இரும்பு சத்தை ஊட்டுகிறது. தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு அகத்தி கீரையை தாய்மார்கள் சாப்பிட்டு வர, நன்கு பால் சுரக்கும்.இந்த மாதிரியான உணவு வகைகளை எடுத்தால் குழந்தைப் பெற்ற பெண்களுக்கு நல்லதாக இருக்கும்.