Skip to main content

‘ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசிய அதானி’ - அமெரிக்கா பகீர் தகவல்!

Published on 22/11/2024 | Edited on 22/11/2024
America accusation  Adani who met Jagan Mohan Reddy

அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்க செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்கு, கவுதம் அதானி  மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டுள்ளார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மின்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, கவுதம் அதானி சந்தித்துப் பேசியுள்ளதாக அமரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, மத்திய அரசால் நடத்தப்படும் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மாநிலத்தின் தயக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக ஆகஸ்ட் 2021 இல் அப்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கவுதம் அதானி சந்தித்ததாக அமெரிக்கா செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பாக , கௌதம் அதானி ஆந்திரப் பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ரூ.1,750 கோடி வரை லஞ்சம் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்