ஆக்சிஜனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விவரிக்கிறார்
உடல் நன்றாக இயங்குவதற்கு நம்முடைய ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜன் தேவை. யோகாவில் நாம் செய்யும் பிராணயாமம் உடலுக்கு மிகவும் நல்லது. இதன் மூலம் ஆக்ஸிஜன் சரியான அளவில் நம்முடைய ரத்தத்தில் சென்று சேரும். அனைத்து உடல் உறுப்புகளும் நன்கு வலுவடையும். கண் காய்ந்து போதல் என்பது முக்கியமான ஒரு பிரச்சனை. கண்ணுக்குள் இருக்கும் லென்ஸுக்கு சரியான முறையில் ஆக்சிஜன் செல்லவில்லை என்றால், அதனால் பவர் ஏறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதன் மூலம் கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆக்சிஜன் சரியான முறையில் செல்லாததால் சிறுவயதிலேயே பலருக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சொந்தத்தில் திருமணம் செய்வதும் குழந்தைகளுக்கு மாலைக்கண் நோய் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு மாலையில் கண்பார்வையில் குறைபாடு ஏற்படும். காலம் செல்லச் செல்ல பகலிலும் அவர்களுக்கு அந்தப் பிரச்சனை ஏற்படும். பிராணயாமம் செய்வது இவர்களுக்கு நல்லது.
சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆக்சிஜன் தெரபி மூலம் பலருக்கு கண்பார்வை சரியாகி இருக்கிறது. நானே பலருக்கு இதைப் பரிந்துரைத்திருக்கிறேன். மாலைக்கண் நோய்க்கு தீர்வே இல்லை என்று பலர் நினைக்கின்றனர். ஆக்சிஜன் தெரபி அவர்களுக்கு பெருமளவில் உதவியிருக்கிறது. முழுமையாகப் பார்வையை இழந்த ஒருவருக்கு ஆக்சிஜன் தெரபி கொடுத்த பிறகு, தன்னுடைய வேலையைத் தானே அவரால் செய்துகொள்ள முடிந்தது.
மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, தூக்கம், உணவு முறை என்று இவை அனைத்தும் வாழ்வில் மிக முக்கியமானவை. ஆக்சிஜன் தெரபியை குறைந்தது பத்து முறையாவது செய்ய வேண்டும். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த தெரபி உதவுகிறது. சில ஊர்களில் மட்டுமே ஆக்சிஜன் தெரபி பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இதைச் செய்வதற்கு எந்த பயமும் தேவையில்லை. சோர்வாக இருப்பவர்கள் கூட ஆக்ஸிஜன் தெரபி செய்யலாம். விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் பலர் இதைப் பயன்படுத்துகின்றனர்.