Skip to main content

பயணத்தின்போது டிரைவர்கள் தூங்குவது ஏன் தெரியுமா? 

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

2016ஆம் ஆண்டு சாலைவிபத்து குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 17 பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் 1.46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக ஒரு தகவல் சொல்கிறது. 
 

road

 

 

 

விதிகளை கடுமையாக்கியும், பல்வேறு ஆய்வுகளை நடத்தியும் இந்த சாலைவிபத்துகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் சாலைவிபத்து ஏற்படுவதற்கான ஆராய்ச்சி ஒன்றை நடத்தி, அதற்கான விடையையும் கண்டுபிடித்திருக்கிறது. 
 

பொதுவாக மோசமான சாலைவிபத்துகளில் 20% டிரைவரின் சோர்வே காரணம் என்பது பரவலாக சொல்லப்படும் கருத்து. அந்த வகையில், டிரைவின் வாகனம்தான் விபத்து ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்து உருவாகும் அதிர்வலைகள் அல்லது வைப்ரேஷன் வெறும் 15 நிமிடங்களில் ஓட்டுநரை உறக்கநிலைக்கும், கவனச்சிதறல் நிலைக்கும் தள்ளிவிடுகிறது. குறைந்த அதிர்வலைகள் குறிப்பாக ஓட்டுநரின் மூளையை மந்தமாக்கி விடுகிறது. குறிப்பாக, ஓட்டுபவர் நல்ல ஓய்வில், நல்ல உடல்நலத்துடன் இருந்தாலும் இது நடப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. 

 

 

வாகன உற்பத்தியாளர்கள் இந்த வைப்ரேஷன்களைக் கட்டுப்படுத்த ஆய்வு நடத்தி வருகிறார்களாம். என்னதான் இருந்தாலும், வாகன ஓட்டிகள் உறக்கம் வந்தால் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்வதே பாதுகாப்பைத் தரும் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.