Skip to main content

வாட்ஸ்அப்பை புறக்கணிக்கும் பயனர்கள்... புதிய மாற்றங்கள் குறித்து வாட்ஸ்அப் விளக்கம்!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

whatsapp

 

வாட்ஸ்அப் நிறுவனம், சமீபத்தில் தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்தது. இது பயனர்களின் தனியுரிமைக்கு எதிரான செயல் என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

 

இந்தநிலையில் வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்களை பாதுகாக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தநிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாட்ஸ்அப்போ, பேஸ்புக்கோ உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை பார்க்கவோ, அழைப்புகளைக் கேட்கவோ முடியாது எனக் கூறியுள்ளது.

 

வாட்ஸ்அப், தன் மூலம் மெசேஜோ, அழைப்போ செய்பவர்களின் விவரங்களைத் திரட்டி வைக்காது எனக் கூறியுள்ளதோடு, வாட்ஸ்அப்போ, பேஸ்புக்கோ நீங்கள் பகிர்ந்துகொண்ட இருப்பிடத்தைக் காண இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

 

மேலும், பயனர்களின் கான்டக்ட்ஸ்கள் (contacts), பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது. வாட்ஸ்அப் குழுக்கள் தனிப்பட்டவையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்கள், மெசேஜ்களை அழிக்க முடியும். பயனர்கள், தங்கள் தகவல்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனக் கூறியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்