தலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி ஒன்றின் வீடியோக்கள் இணையவாசிகள் பலரையும் கவர்ந்து வருகிறது.
அமெரிக்காவின் மிசூரி மாகாணம் ஜாக்சன் நகரில் உள்ள விலங்குகளுக்கான தொண்டு நிறுவனமான ‘மேக்ஸ் மிஷன்’ என்ற தொண்டு நிறுவனம் நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறது. நர்வால் என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த நாய்க்குட்டி மற்ற நாய்களிடமிருந்து சற்று வித்தியாசமானது எனலாம். தலையின் நாடு ஒரு சிறிய வாலுடன் பிறந்துள்ள அந்த நாய்க்குட்டி பலரையும் கவர்ந்துள்ளது.
பிறந்து 10 வாரங்கள் ஆன நர்வால் செய்யும் சேட்டைகளை படம்பிடித்து ‘மேக்ஸ் மிஷன்’ தொண்டு நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் நர்வாலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது எனலாம். நர்வாலின் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டும் வருகிறது. நெற்றியில் உள்ள வால் குறித்து பரிசோதித்த மருத்துவர்கள், அதனால் நாய்க்குட்டிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என கூறியுள்ளனர்.