Skip to main content

ஒமிக்ரானால் லேசான பாதிப்புதான் ஏற்படுமா? - தென்னாபிரிக்க நிபுணர்கள் விளக்கம்!   

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

corona

 

டெல்டா வகை கரோனாவை விட மிக ஆபத்தானது என கருதப்படும் ஒமிக்ரான் கரோனா முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடான தென்னாபிரிக்காவில், கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் செவ்வாய் கிழமை 4,373 பேருக்கு கரோனா உறுதியாகிருந்த நிலையில், புதன்கிழமை 8561 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

 

அதேபோல் கடந்த வாரத்தில் உறுதியான கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை விட இந்த வாரம் 571 சதவீத அதிக கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. தற்போது அந்தநாட்டில் கரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதற்கு ஒமிக்ரான் கரோனா காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

இந்தநிலையில் ஒமிக்ரான் குறித்து தென்னாபிரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த அந்தநாட்டின் தேசிய தொற்றுநோய் நிறுவன நிபுணர்கள், ஒமிக்ரான் கரோனா லேசான பாதிப்பதைத்தான் ஏற்படுத்தும் என தற்போது தீர்மானிக்க முடியாது. ஒமிக்ரான் தற்போது அதிக இளம் வயதினரையே பாதிப்பதால், அதனுடைய உண்மையான தாக்கத்தை கண்டறிவது தற்போதைக்கு கடினமாக உள்ளது. ஏனெனில் இளம் வயதினரால் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட முடியும் என கூறியுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்