Skip to main content

தேசிய அளவில் ட்ரெண்டான 'துரை வைகோ'

Published on 02/04/2025 | Edited on 02/04/2025
Durai Vaiko is trending nationally

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் தலைமை நிலைய முதன்மை செயலாளருமான துரை வைகோவிற்கு இன்று பிறந்தநாள். பல அரசியல் பிரபலங்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவருடைய 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க வாழ்த்துகிறேன்' என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வில் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று மக்களின் நலனில், அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை தொடர வாழ்த்துகிறேன்' என வாழ்த்தியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு தலைவர்கள் துரை வைகோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மதிமுக தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு உற்சாக கொண்டாடட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் தேசிய அளவில் #HBDDuraiVaiko என்ற ஹேஷ்டேக்  ட்ரெண்டாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்