டப்ஸ்மேஷ் உள்ளிட்ட 16 இணையதளங்களில் புகுந்த ஹேக்கர்கள் 617 மில்லியன் பயன்பாட்டாளர்களின் கணக்குகளை திருடியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நாம் பயன்படுத்தும் எந்த ஒரு ஆப்-களாக இருந்தாலும் நமது ஃபோன் நம்பர், இ-மெயில் ஐ.டி, பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை பதிவு செய்தே பயன்படுத்துகிறோம். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 617 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை 16 இணையதளங்கள் வழியாக ஹேக்கர்கள் திருடியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல்களை அவர்கள் சட்டவிரோத இணையதளங்களுக்கு சுமார் 20,000 பிட் காயின்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தத் தகவல்கள் மோசடி கும்பல், இணையதள குற்றங்களில் ஈடுபடுவோரிடமும் விற்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தகவல்கள் திருடப்பட்ட 16 இணையதளங்களில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் இணையதளம் மற்றும் கணக்கு விவரங்கள்,
டப்ஸ்மேஷ் (Dubsmash) - 162 மில்லியன்
மை ஃபிட்நெஸ் பல் (MyFitnessPal) - 151 மில்லியன்
மை ஹெரிடெஜ் (MyHeritage) - 92 மில்லியன்
ஷேர் திஸ் (ShareThis) - 41 மில்லியன்
இந்தத் தகவல்களை திருடி விற்ற ஹேக்கர்கள் அமெரிக்காவின் புறநகரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் டப்ஸ்மேஷ் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் குறைந்தபட்சம் ஒருவரிடமாவது விற்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.