Published on 11/02/2019 | Edited on 11/02/2019
அபுதாபி நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இந்தியை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அபுதாபியில் அரபிக் மற்றும் ஆங்கிலம் மட்டுமே வழக்காடு மொழியாக இருந்துவந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது அலுவல் மொழியாக இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 90 இலட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்துவந்தவர்கள். இதில் இந்தியர்கள் சுமார் 26 இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் தொழிலாளர் வழக்குகளில் மூன்றாவது அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் என அபுதாபி நீதித்துறை அறிவித்துள்ளது.