Published on 18/10/2019 | Edited on 18/10/2019
சிரியா நாட்டில் உள்ள குர்து மக்களின் மீது துருக்கி ராணுவம் கடந்த சில தினங்களாக கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் துருக்கியின் இந்த தாக்குதலில் இதுவரை 637 குர்து மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் தனி நாட்டிற்காக போராடி வந்தது குர்து இன போராளிகள் குழு. சமீபத்தில் அமெரிக்கா, சிரியாவிலிருந்து தனது ராணுவத்தை திரும்ப பெற்ற நிலையில், குர்து மக்கள் ஆதரவில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் துருக்கி அதிபர் அறிவுறுத்தலின் பேரில், துருக்கி ராணுவம் சிரியா நாட்டில் உள்ள குர்து போராளிகள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், துருக்கியின் இந்த தாக்குதலில் இதுவரை 637 குர்து இன மக்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.