Published on 23/06/2020 | Edited on 23/06/2020
மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி, இரவு 10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ட்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்து வரும் நிலையில் நிலநடுக்கமும், சுனாமி எச்சரிக்கையும் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.