Skip to main content

நீங்கள் முதலைகளாக மாறலாம் - கரோனா தடுப்பூசி குறித்து பிரேசில் அதிபர் எச்சரிக்கை!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020
bolsonaro

 

 

பிரேசில் அதிபராக இருப்பவர் போல்சனேரோ. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனாத் தொற்றை, சிறிய அளவிலான ஃப்ளு காய்ச்சல் என கூறியிருந்தார். இந்தநிலையில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும், நான் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர், "எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.' நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை" என பைசர் ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

 

மேலும், "நீங்கள் ஒரு சூப்பர் ஹியூமனாக மாறினால், ஒரு பெண் தாடியை வளர்க்கத் தொடங்கினால் அல்லது ஆண்  குரலில் பேச ஆரம்பித்தால், அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது" என பைசர் நிறுவனத்தை போல்சனேரோ விமர்சித்துள்ளார்.

 


பிரேசிலில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியே சோதனை செய்யப்பட்டு வருகிறது. பிரேசில் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு பிறகு, இந்த தடுப்பூசிகள் யாருக்கெல்லாம் வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கும். ஆனால் நான் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் என போல்சனேரோ தெரிவித்துள்ளார்.

 

சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தலைவர்கள், தடுப்பூசியின் மேல் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்பதற்காக முதலில் தங்களுக்கு செலுத்திக்கொள்ளும் நிலையில், பிரேசில் போல்சனேரோ அதிபர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; திருச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

covid infection increased trichy womens admitted government hospital

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

 

தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் நேரு கூறியுள்ளார்.