Published on 30/08/2018 | Edited on 30/08/2018
![KATHAMANDU](http://image.nakkheeran.in/cdn/farfuture/ly2TbFnmNCPjLNs4s6b7fER2149i2XdOyZNem_EsFGI/1535623200/sites/default/files/inline-images/KATHAMANDU.jpg)
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கு சென்றவர் 4வது பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கிறார்.
வங்கக்கடலை சுற்றியுள்ள நாடுகளான இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகியவற்றின் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பிற்காக பிம்ஸ்டெக் என்ற அமைப்பு அந்நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், நேபாளத்திலுள்ள காத்மாண்டுவில் 4வது பிம்ஸ்டெக் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டுச் சென்றார் மோடி.
உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.