Published on 18/06/2019 | Edited on 18/06/2019
பாகிஸ்தான் ராணுவத்தையும் அதன் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பையும் விமர்சித்த 22 வயதான இளம் பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பு குறித்து விமர்சித்த சிலமணிநேரங்களில் அவர் கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்தது யார் என காவல்துறையினர் வாழைக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக ஊடங்களில், பிலால் கானின் கொலைக்குக் காரணமான பாகிஸ்தான் ராணுவத்தையும், ஐஎஸ்ஐ அமைப்பையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் முகமது பிலால் கான் கொல்லப்பட்டபின், ஜஸ்டிஸ் 4 முகமது பிலால்கான் என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானில் பிரபலமாகி வருகிறது.